மரப்பாலம் குளத்தில் மூழ்கி இளைஞன் பலி!


 மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரப்பாலம் குளத்தில் நீராடச்சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய அன்ரன்ராஜ் விதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிஸ் கிராமத்தில் இருந்து மரப்பாலத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞர், நேற்று மாலை மரப்பாலம் குளத்தில் குளிக்கச்சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.