பெண் ஊடகவியலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை!


 சீனா – வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகப் பரவிய காலத்தில் அங்கிருந்தவாறு அது குறித்த செய்திகளை வெளியிட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சீன நீதிமன்றம் இன்று (28) தீா்ப்பளித்துள்ளது.

37 வயதுடைய ஜாங் ஜான் என்ற இந்த பெண் ஊடகவியலாளர் கொரோனா தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்திய நிலையில் தவறான தகவல்களை பரப்பி நாட்டில் சிக்கலை தூண்டிய குற்றச்சாட்டில் மே மாதம் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

சீனாவின் ஷாங்காயின் வணிக மையமான புடோங்கில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கு விசாரணை சீனா நேரம் மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. ஜாங்கிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டது.

மே மாதம் கைது செய்யப்பட்ட இவர் பிணையின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.