பிரித்தானிய விமான சேவைகளை 50 நாடுகள் நிறுத்தியது!


 பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதியவகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரித்தானிய விமானங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

பிரித்தானியாவில் திடீரென கொரோனாத் தொற்றும் மரணங்களும் அதிகரித்து வருவதற்கு அங்கு பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரித்தானியாவில் மீண்டும் முழு அளவிலான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அச்சுறுத்தல் நிலை காரணமாக ஐரோப்பிய நாடுகள் பிரித்தானிய விமானங்களுக்கு தடைவிதித்துள்ளன. இதையடுத்து அயர்லாந்து, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம், சவுதி, குவைத் உட்பட 50 நாடுகள் வரையில் பிரித்தானிய விமான சேவைகளை நிறுத்தியுள்ளன.

Blogger இயக்குவது.