ப்ளஸிஸின் அபாரத்தால் 621 ஓட்டங்களை விளாசியது தெஆ!
சுற்றுலா இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 26ம் திகதி செஞ்சுரியனில் ஆரம்பமானது.
போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி நான்கு வீரர்களின் சிறப்பாட்டத் துணையுடன் 96 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து அபாரமாக 396 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அசத்திய தினேஷ் சந்திமால் (85), தனஞ்சய டி சில்வா (79) காயமடைந்த நிலையில் வெளியேறினார், டசுன் ஷானக (66*), நிரோஷன் டிக்வெல்ல (49) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் அறிமுக வீரச் லுதோ சிபம்லா (76/4), வியான் முல்டர் (69/3) விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி எல்கர் – மர்க்ரம் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் விரைவாக 43 ஓவர்களில் 200 ஓட்டங்களை பெற்றது, எனினும் அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய சற்று தடுமாறியது. ஆயினும் நேற்றைய ஆட்ட நாள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 317 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இன்று தொடர்ந்து ஆடி 621 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் மிரட்டிா பப் டு ப்ளஸிஸ் (199), டெயன் எல்கர் (95), கேசவ் மஹாராஜ் (73), தெம்பா பவுமா (71), அய்டன் மர்க்ரம் (68) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் வனிது ஹசரங்க (171/4), விஷ்வ பெர்னாண்டோ (129/3), டசுன் ஷானக (68/2) விக்கெட்களை கைப்பற்றினர்.
தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநாள் நிறைவில் 65 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்களை இழந்த நிலையில் 160 ஓட்டங்கள் பின்னிலையில காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை