2வது இன்னிங்ஸில் அவுஸ் சொதப்பல்!


 சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி 26ம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமாகிய நிலையில், இந்திய அணி பலமான நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணியை குறைந்த ஓட்டங்களுக்குள் மடக்கி வெற்றியை பெறக்கூடிய அதிக வாய்ப்பு இந்திய அணியின் பக்கமே உள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 72.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சன் (48), ட்ரவிஸ் ஹெட் (38) ஓட்டங்களை பெற்றிருந்தனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (56/4), ரவிச்சந்திரன் அஸ்வின் (35/3) விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் அஜிங்கியய ரஹானே (112), ரவீந்திர ஜடேயா (57), சுப்மன் கில் (45) ஓட்டங்களை பெற்றுதவினர். பந்துவீச்சல் மிச்சல் ஸ்ராக் (78/3), நதன் லயன் (72/3), பட் கம்மின்ஸ் (80/2) விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

தமது இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றியிலக்கை நிர்ணயிக்க ஆடிவரும் அவுஸ்திரேலிய அணி 133 ஓட்டங்களை மட்டும் பெற்று 6 விக்கெட்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.