கிழக்கில் இன்று 85 பேர்!


 மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் 1,214 பேருக்கு இன்று (30) பிசிஆர் மற்றும் துரித அன்ரிஜன் கருவி மூலம் மேற்கொண்ட பரிசோதனைகளில் 61 பேருக்கு தொற்றுதிப்படுத்தப்பட்டது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டபடி காத்தான்குடியிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் 665 பேருக்கும் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் 549 பேர் உட்பட 1,214 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை அந்தந்த பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டன.

இதன்காரணமாக 17 வர்த்த நிலையங்கள் சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தொற்றாளர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று திரும்பியவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் இன்று 85 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி மட்டக்களப்பு – காத்தான்குடி – 46, மட்டக்களப்பு நகர் – 6, ஏறாவூர் – 5, ஆரையம்பதி – 1, பட்டிப்பளை – 1, வவுணதீவு – 1, ஓட்டமாவடி -1. அம்பாறை – கல்முனை தெற்கு – 14, கல்முனை வடக்கு – 1, காரைதீவு – 1, உஹன – 1. திருகோணமலை – குச்சவெளி -1, மூதூர் -5, உப்புவெளி -1 என தொற்றுக்கள் பதிவானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.