முள்ளியவளை கிணற்றில் உருக்குலைந்த சடலம்!


 முல்லைத்தீவு – முள்ளிவளையில் கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.

நாவற்காடு பகுதியில் உள்ள நீர் குறைந்த கிணறு ஒன்றின் உள்ளேயே குறித்த சடலம் காணப்படுகின்றது.

கிணற்றின் வெளியில் ரி சேட் ஒன்றும், ஆண்கள் அணியும் பாதணிகளும் காணப்படுவதாக தெரியவருகிறது.

அந்தப் பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நீதிபதி சம்பவ இடத்திற்கு வரும் வரையில் யாரையும் கிணற்றுக்கு அண்மையில் அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.