மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தினம் யாழில் அனுஷ்டிப்பு!


மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை அடியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பாரதியார் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதியார் நினைவுத் தூபிக்கு இந்திய துணைத் தூதுவர் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பாரதியாருக்கு மலர்மாலை அணிவித்தனர்.

இதன்பின்னர் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னால்ட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.