தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களிலுள்ள 51 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 18 பிரதேசங்களும், கம்பஹா மாவட்டத்தில் 11 பிரதேசங்களும், களுத்துறை மாவட்டத்தில் 7 பிரதேசங்களுமான மேல் மாகாணத்தில் 35 பிரதேசங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 4 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் 5 பிரதேசங்களும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.