பெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பு ஆறு இலட்சத்தை கடந்தது!
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து 397பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 20ஆவது நாடாக விளங்கும் பெல்ஜியத்தில் இதுவரை வைரஸ் தொற்றினால், 17ஆயிரத்து 692பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 754பேர் பாதிக்கப்பட்டதோடு 89பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால், ஐந்து இலட்சத்து 41ஆயிரத்து 916பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 657பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 40ஆயிரத்து 789பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை