அழுகிய நிலையில் தாய் மற்றும் மகளின் சடலங்கள்!!

 


தமிழகத்தின் சென்னையில் தாய் மற்றும் மகள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து அயலவர் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், வீட்டை உடைத்து உள்ளே சென்ற போது, தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் தாயாரின் உடல் இருந்ததுடன் , மகளின் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலாமாகக் கிடந்துள்ளார்.

அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டில் இருந்து 2 கடிதங்களை கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், கோதண்டபானி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தங்களை மோசடி செய்து விட்டதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என தந்தை எழுதிய கடிதத்தை கைப்பற்றிய பொலிஸார் அவரை தேடியபோது குறித்த நபர் கிடைக்கவில்லை .

இதனையடுத்து மனைவி, மகளை கொலை செய்து விட்டு கணவர் தப்பியோடி விட்டாரா? கணவருக்கு என்ன ஆனது? பொலிஸாரை குழப்புவதற்காக கடிதம் எழுதி வைத்தாரா என பல கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே தாயாரின் செல்போனை எடுத்துக் கொண்டு இரண்டாவது மகளையும் தூக்கிக் கொண்டு கணவர் தலைமறைவானது தெரியவந்தது.

இந்நிலையில் ஐ.எம்.இ.ஐ நம்பரை தேடி வந்த பொலிஸார், இன்று காலை கோயம்பேடு அருகே கணவரை கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.