சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை!


சிறையிலுள்ள கைதிகளை பிணையில் அனுப்பவும் பொதுமன்னிப்பு வழங்கக் கூடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அனுப்பவும் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து எமது கவலையை தெரிவிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலை குறைக்க பல முன்னெடுப்புகள் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது.

காவற்துறை மற்றும் சட்டமா அதிபருடன் பேசியுள்ளோம். முடிந்தளவு நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பிணை வழங்கவும் வழக்கு விசாரணை முடியும் வரை 637 பேருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஜனாதிபதி செயலகத்தில் 4 மணி நேரம் ஆராயப்பட்டது.

பிணை வழங்கினாலும் 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும்.இது தொடர்பிலும் பிரச்சினை உள்ளதால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நெரிசலை குறைக்க சகல விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு சம்பவம் குறித்து ஆராய குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் ஒரு வார காலத்தில் இடைக்கால அறிக்கை கிடைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மஹர சிறை சம்பவம் தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

மஹர சம்பவம் தொடர்பில் ஆராய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசாலா சரோஜினி வீரவர்தன தலைமையில் ஐவரடங்கிய குழு நியமித்துள்ளேன். இந்தக் குழு 3 மாதங்களில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கும். ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கும். காவற்துறையினரும் தனியான விசாரணை நடத்தி வருகின்றனர். காவற்துறை அதிபர் சி.ஐ.டிக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். நடந்த சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிக்கிறோம்.இதன் பின்னணியில் பல விடயங்கள் இருக்கின்றன. அவை தொடர்பில் முழுமையான தகவலை சபைக்கு சமர்ப்பிப்போம் எனவம் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.