போரில் பங்கேற்ற பிரித்தானிய கூலிப்படையினர் மீது போர்க்குற்ற விசாரணை!


இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரித்தானிய கூலிப்படையினர் போர்க்குற்றங்களுக்காக பிரித்தானிய பெருநகர காவல்துறையினரால் விசாரிக்கப்படுகிறார்கள்.

தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சேர்வீசஸ் (கே.எம்.எஸ்) 1980 களில் இலங்கை விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சியளித்தனர்.

தமிழ் மக்கள் ஆயுதரீதியான போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், விசேட அதிரடிப்படைக்கு நவீன பயிற்சியளிக்க இலங்கை இந்த ஏற்பாட்டை செய்தது.

இலங்கையில் நடந்த யுத்தத்தில் பல்வேறு மனத உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் விசேட அதிரடிப்படையும் சிக்கியுள்ளது.

தமிழ் மக்கள் கொல்லப்படுவது, விசாரணையின்றி சுட்டுக்கொல்லப்பட்டது என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் இங்கிலாந்து அமைப்பான மெட் நிறுவனத்தால் பிரிட்டிஷ் கூலிப்படையினர் விசாரணைக்குட்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மார்ச் மாதத்தில் பிரிட்டிஷ் கூலிப்படையினரால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு பரிந்துரையைப் பெற்றதன் அடிப்படையில், விசாரணையைத் தொடங்கியதாகவும் கூறினார்.

இலங்கையில் கே.எம்.எஸ்ஸின் ஈடுபாட்டைப் பற்றிய பெரும்பாலான சான்றுகள் பிரிட்டன் அரசாங்க ஆவணங்கள் மற்றும் பத்திரிகையாளர் பில் மில்லர் சமர்ப்பித்த தகவல் ஆகியவற்றிலிருந்து கிடைத்தன.

கீனி மீனி போர்க்குற்றங்களுடன் தப்பித்த பிரிட்டிஷ் கூலிப்படையினர் என்ற அவரின் புத்தகம், ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

ஹெலிகொப்டரில் இருந்து துப்பாக்கியால் தாக்கப்பட்டதை பிரிட்டனில் உள்ள தமிழ் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் ஹெலிகொப்டர்களில் பிரிட்டிஷ் கூலிப்படையினர் பறந்தனர் என்பதை அறிந்து மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். என மில்லர் தெரிவித்திருந்தார்.

டேவிட் வாக்கரால் கே.எம்.எஸ் நிறுவப்பட்டது. கே.எம்.எஸ் இப்போது இல்லையென்றாலும், கென்சிங்டனைத் தளமாகக் கொண்ட சலாடின் செக்யூரிட்டி என்ற இன்னொரு நிறுவனத்தின் இயக்குநர்களில் அவரும் ஒருவர்.

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு கே.எம்.எஸ்ஸைச் சேர்ந்த எவரும் உடந்தையாக இருக்கவில்லை என்று வாக்கர் உறுதியாகக் கூறினார்.

ஒரு அறிக்கையில், அவரது பிரதிநிதி கூறினார்: டேவிட் வாக்கர் அல்லது கே.எம்.எஸ் லிமிடெட் ஊழியர்கள் 1980 களின் நடுப்பகுதியில் இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டுகள் திட்டவட்டமாக மறுக்கப்படுகின்றன.

போர்க்குற்றங்கள் பிரிவு இன்னும் சலாடின் அல்லது வாக்கரிடமிருந்து உதவி கேட்கவில்லை, ஆனால் அவர்கள் கேட்டால் அவர்கள் ஒத்துழைப்பதில் மகிழ்ச்சியடைவார்கள்.என தெரிவிக்கப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.