தமிழருக்கு கோட்டாபய அரசாங்கத்தில் வழங்கப்பட்ட உயர் பதவி!
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவருக்கு வழங்கியுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் யாப்பின் 41(ஏ) மற்றும் 155 (ஏ) (1) சட்டப்பிரிவுக்கமைய அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
த.ப. பரமேஸ்வரன் அவர்கள் நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டத்தையும் பெற்ற சட்டத்தரணியுமாவார்.
மேலும் அவர் கொழும்பு விவேகானந்தா கல்லூரி, கொழும்பு டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியின் உப அதிபராகவும் கடமையாற்றியதுடன் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றவர் என்பவர் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை