சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!
இனிவரும் விடுமுறை தினங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் பொருட்டு, கீழுள்ள விடயங்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிறிஸ்துமஸ்/விடுமுறை தினங்களில் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்வதை மட்டுப்படுத்தல்
பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் சென்று வரல்
வீடுகளுக்கு அருகில் உள்ள, மிகக் குறைவான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் கடைகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்தல்
பெருமளவில் மக்கள் கூடும் வகையில், கேளிக்கை நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதைத் தவிர்த்தல்
கிறிஸ்துமஸ் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவிக்கும் போது சமூக இடைவௌியைக் கடைப்பிடித்தல்
வீட்டிலுள்ள வயோதிபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வீடுகளுக்கு உறவினர், நண்பர்களின் வருகையை மட்டுப்படுத்தல்
பொருட்கொள்வனவின் போது வரிசையில் நிற்பவர்களுக்கு இடையில் இடைவௌி இருப்பதை உறுதிப்படுத்தல் (அவ்வாறு இடைவௌியைப் பேணாதவர்களிடம் அதனைச் செய்யுமாறு அறிவுறுத்துவது உங்கள் உரிமையும் கடமையுமாகும்)
முடியுமானவரை ஒன்லைன் மூலமான கொள்வனவில் ஈடுபடல்
வௌியிடங்களுக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்த்தல்
வீட்டிலிருந்து வௌியில் செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்வதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை