30 ஆண்டுகளாக மகனை வீட்டில் அடைந்து வைத்திருந்த தாய்!
தனது மகனை 30 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறித்த சம்பவம் சுவீடனில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த மகனுக்கு இப்போது 40 வயது.
அவர் 10-11 வயதிலிருந்தே இது போன்ற கைதியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
70 வயதான அவரது தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியதையடுத்து மகன் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
குறித்த நபரின் சகோதரி இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளார்.
மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போதே, அவளுடைய சகோதரனை இந்த வழியில் கண்டுபிடிக்க முடிந்தது,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அது முற்றிலும் இருட்டாக இருந்ததாகவும், சிறுநீர் துர்நாற்றம் மற்றும் தூசி நிறைந்ததாகவும் காணப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
வீட்டில் யாரும் பதிலளிக்கவில்லை, எனினும் சமையலறையில் ஒரு குரல் கேட்டது. அங்கு சென்றபோது, சகோதரர் இருண்ட மூலையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.
அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், அவரிடமிருந்து ஒரு வாசனை வெளிவந்ததாகவும் அந்த சகோதரி கூறினார்.
தனது தாயார் தனது சகோதரரை சுமார் 10 வயதில் பள்ளியிலிருந்து இடை நிறுத்தினார் என்று அவர் மேலும் கூறினார்.
பின்னர் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகனை சிறையில் அடைத்ததாக தாய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டிவரும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வெளிநாடுகளில் அதிகளவான சம்பவங்கள் மன விரக்தியினாலையே இடம்பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை