கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்!


 “விடுதலை புலிப் பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறானது. புலிகளை அழித்தது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்”

இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று (03) நாடாளுமன்ற சபையில் தெரிவித்தார்.

அத்துடன்,

ஹிட்டலர் மரணமடைந்த பின்னர் அவரது நாசி கட்சி அழிந்து போனது என்பதை சுட்டிக்காட்டியே அக்கருத்தை குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி எம்பி நளின் பண்டார, ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் ஒரு கட்சி. நீங்கள் கருணாவையும், பிள்ளையானையும் மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டு கூட்டமைப்பை தடை செய்ய சொல்கிறீர்கள். அதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று கடுமையாக தெரிவித்தார்.

மேலும் ‘பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொண்டு சரத் வீரசேகர வெக்கமற்று கூட்டமைப்பை தடை செய்யுமாறு கூறுகிறார்’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.