யாழில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!


யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

இதன்போது பலாலி – அன்ரனிபுரத்தில் வைத்து தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தற்போது 21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 720 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 605 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் 16 வீடுகள் முழுமையாகவும்ஆயிரத்து 256 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் கணபதிப்பிள்ளா மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சங்காணை பிரதேசத்தில் நேற்றையதினம் கடலுக்கு சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்க அதிபர், இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் தொண்டைமனாறு தடுப்பு அணையின் 8 கதவுகள் திறக்கப்பட்ட போதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர் வடிந்து ஓடுவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிற்பகல் வரை மழை தொடருமாக இருந்தால், வெள்ள நிலைமை அதிகரிக்கும் எனவும் கணபதிப்பிள்ளா மகேசன் தெரிவித்துள்ளார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.