மீண்டும் மாளிகைக்காடு கடலுக்குள்!


வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக காரைதீவுக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் பள்ளிவாசல் மையவாடி மீண்டும் கடலுக்குள் காவுகொள்ளப்பட்டுவருகிறது.

மையவாடியின் கிழக்குப்பக்க மதில் சீற்றமிகு கடலலலையால் அடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மையவாடியின் கிழக்கு பக்கம் படிப்படியாக கடலுக்குள் உள்வாங்கப்பட்டுவருவதுடன் அங்குள்ள ஜனாசாக்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றன.

இச்சம்பவமானது இன்று அதிகாலைமுதல் இடம்பெற்றுவருகிறது.

இதேவேளை கடந்த ஒருமாதகாலத்திற்கு முன்னரும் கடலரிப்பு காரணமாக இதே மையவாடியின் ஒருபக்க மதில் இடிந்து வீழ்ந்தது.

இந்நிலையில் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தவிசாளர் கி.ஜெயசிறில் உபதவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோர் அங்குவிரைந்து பார்வையிட்டதுடன், மாளிகைக்காடு அந்நூர் பள்ளிவாசல் நிருவாகத்தினரின் முயற்சியினால் மீண்டும் மதில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கென பாறாங்கற்கள் கொண்டுகுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீதி மதிலும் நேற்றைய கடல்சீற்றத்தினால் அடித்து தரைமாக்கப்பட்டுள்ளது.

மையவாடி கடலுக்குள் உள்வாங்கப்படும் சம்பவத்தை கேள்வியுற்ற காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கடரோலரப்பாதுகாப்பு அலுவலர் எ.எம்.மகுறூப் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதனையடுத்து கல்வேலி அமைப்பது பற்றியும் இழுத்துச் செல்லப்படும் எஞ்சிய பிரேதங்களை ஒரு பாரிய குழியை வெட்டி அடக்கம் செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவுடன் தொடர்புகொண்ட பிரதேசசெயலர் நிலைமையை விளக்கி கூறிய நிலையில், அவசியமான நடவடிக்கையை எடுக்குமாறு கூறிய அரசஅதிபர் தானும் வருவதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவிக்கையில்,

மையவாடி பாதுகாப்பு விடயத்தில் இங்குள்ள மக்கள் ஒற்றுமைப்பட்டு முடிவுஎடுக்கவேண்டும். பிரிந்துநின்றால் எங்களால் எதுவும் செய்யமுடியாது போய்விடும். எனவே நீங்கள் இதற்கென ஒரு குழுவை அமைத்து செயற்படுங்கள் என ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.