யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
யாழில் கடந்த வாரம் முதல் பெய்த கடும் மழை காரணமாக கிணற்று நீரினை பருகும் போது அவதானமாக இருக்குமாறும், முடிந்தளவு கொதிக்க வைத்து ஆறிய நீரினை பருகுமாறும் மக்களுக்கு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை காரணமாக கிணறுகளின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றன.
அத்துடன் கிணறுகளில் வெள்ள நீரும் கலந்து உள்ள நிலையில் அவற்றை பருகுவதனால், வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கொதித்து ஆறிய நீரினை பருகுவதுடன் , கிணறுகளுக்கு குளோரின் இடுமாறும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை