இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
கொரோனா தொற்றுப் பரவல் சமூகமட்டத்தில் அதிகரித்த காரணத்தால், அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகக்கவசம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்திலான சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த முகக் கவசத்தை தடை செய்யுமாறு தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பேராசிரியர் வைத்தியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
N95 எனப்படும் அந்த முகக் கவசத்தில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. சர்ஜிக்கல் முகக் கவசம் பாதுகாப்பானதாகும்.
அதிக விலையுடனான N95 பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதி குறைந்தவர்கள் சாதாரண துணியை பயன்படுத்தி முகக் கவசத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இரண்டு துணிகள் வைத்து தயாரிக்க வேண்டும்.
N95 முகக் கவசத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டையில் கிருமி தொற்று மூக்கினுள் செல்ல வாய்ப்புகள் உள்ளது.
இதனால் அதனை தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்கள் கொரோனா தொற்றில் இருந்தது தம்மை பாதுக்காக்க முகக்கவசத்தை கட்டாயம் பயன்படுத்துவதோடு, சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொல்லப்படுகிறீர்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை