பிரான்ஸுக்கு சென்ற தமிழ் இளைஞரின் தந்தையின் கோரிக்கை!


பிரான்ஸுக்கு சென்ற வவுனியா இளைஞர் தொடர்பில் தந்தைஒருவர் உருக்கமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

வவுனியாவை சேர்ந்த மகேந்திரன் கவிஞ்சன் Passport number (N8082722) என்பவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக மொரோக்கோ நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக பயணித்த வேளை விபத்து ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் குறித்த இளைஞரின் தந்தையான இல 413 8ம் ஒழுங்கை தரணிக்குளம் வவுனியாவை சேர்ந்த சோமசுந்தரம் மகேந்திரன் தமது மகன் தொடர்பில் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்

அதாவது கடல்மார்க்கமாக பயணித்தவர்களின் சடலங்கள் Hospital Laayoune, boulevard la marine,laayoune، laayoune, 70000 எனும் விலாசத்தில் உள்ள வைத்தியசாலையில் வைத்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டில் தெரிந்தவர்கள் யாரும் இன்மையால், தமது மகன் தொடர்பிலான தகவலை உறுதிபடுத்துவதற்கு தமக்கு உதவி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.