வவுனியாவில் கணவன் முறைப்பாடு!


உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற, மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என அவரது கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த கணவன், “வவுனியா- வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ராஜா வினிதா என்ற எனது மனைவி கடந்த 13 ஆம் திகதி மாலை,  உறவுக்காரர் வீட்டிற்கு சென்றுவருவதாக எனது தாயாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

குறித்த நேரத்தில் நான் உறங்கிக்கொண்டிருந்தமையால் அவர்கள் சென்றதை அறிந்திருக்கவில்லை.

எனினும் நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராதமையினால் அவர் சென்றதாக தெரிவிக்கப்படும் உறவினர் வீடுகளில் சென்று பார்த்தபோது அவர் அங்கு வரவில்லை என தெரிவித்தனர்.

அவரது தொலைபேசியும் இயங்கவில்லை. இந்நிலையில் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், 076-9080042 என்ற கணவனின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.