முல்லைத்தீவு காட்டுக்குள் அனுராதபுர கால சிங்கள மன்னனின் கல்வெட்டு!
அனுராதபுரக் காலத்தில் ஆட்சி செய்த மன்னனின் கல்வெட்டு, முல்லைத்தீவு கட்டுக்குள் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள நாகசோலை வனப்பகுதியில் வவுனியா தொல்பொருள் ஆய்வு மையம் அகழ்வாராய்ச்சி நடத்தியதாக அறிவித்துள்ளது.
78 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பகுதியில் நடத்தப்பட்டதாகவும், இதன்போது பல தொல்லியல் சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருங் கல்லால் செய்யப்பட்ட ஒரு ஸ்தூபம், உடைந்த சுவர்கள், கல் தூண் கட்டடங்கள், சந்தி வட்டக் கற்கள் மற்றும் செதுக்கப்பட்ட கல் கூரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போர் மற்றும் புதையல் தோண்டுபவர்களால் இந்த இடம் மோசமாக சேதமடைந்துள்ளதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு மீட்கப்பட்ட கல்வெட்டு, அனுராதபுரக் காலத்தில் ஆட்சிபுரிந்த மன்னர் நான்காம் உதயவுக்கு (கி.பி 946- 954) சொந்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் கிட்டத்தட்ட 100 வரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை