பெண்களை முறைகேடாக விமர்சித்த முஸ்லிம் இளைஞன்!
கொழும்பில் உள்ள பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்த பஸ்லுல்லாஹ் முபாரக் என்னும் முஸ்லிம் இளைஞன் பெண்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த முஸ்லிம் இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை தனது முகநூலில் ஒரு பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு மாற்று மத நண்பர் என்னிடம் கேட்டார், ஏன் முஸ்லிம் பெண்கள் தமது உடலில் பெரும் பகுதியை மறைக்கிறார்கள் என்று? அதற்கு நான் கூறினேன், மறைக்க வேண்டியதை மறைத்தால்தான் அவளுக்கு பெயர் – பெண், மறைக்க வேண்டியதை திறந்திருந்தால் அதற்கு பெயர் பெண்ணல்ல என பதிவ்விடுந்ததுடன், மறைமுகமாக தமிழ், சிங்கள இந்து, கிறிஸ்தவ பெண்களை அவர் சாடியிருக்கின்றார்.
இந்த நிலையில் ஒரு ஊடகத்தில் பணிபுரிந்துகொண்டு, அதுவும் தமிழ் பெண்களுடனும் சிங்களப்பெண்களுடனும் பணிபுரிந்துகொண்டு , இவ்வாறு பெண்கள் தொடர்பில் வக்கிரமான எண்ணம் கொண்ட இந்த கருத்து சரியா என விமர்சிக்கப்படுகிறது.
அத்துடன் உங்களைப்போன்ற ஆண்களிடமிருந்து தமிழ், சிங்கள பெண்கள் விலகியே நடக்க வேண்டும், இவர் பணிபுரியும் தனியார் ஊடகம் உண்மையில் பெண்களை மதிப்பதாக இருந்தால், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பில் அக்கறையிருந்தால் குறித்த முஸ்லிம் இளைஞன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவரின் கூற்றுப்படி இலங்கையில் உள்ள முஸ்லீம் பெண்கள் தவிர, இந்து, கிறிஸ்தவ, பௌத்த மத பெண்கள் முறையற்று வாழ்பவர்களா எனவும் கடும் விமர்சங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இதனையடுத்து குறித்த இளைஞர் அந்த தொலைக்காட்சியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை