இலங்கை இளைஞர்களை குறிவைக்கும் மாபியாக்கள்!


போலந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாமென நாட்டு மக்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல இளைஞர், யுவதிகளிடம் போலந்து வேலைவாய்ப்பு பெற்றுத்தருவாக கூறி பண மோசடியில் ஈடுபடும் குமபல் பறறிய தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில உள்ளூர் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் விசாரிணை நடத்திவருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

போலந்தில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கவர்ந்திழுக்கின்றன.

வேலை தேடும் இலங்கையர்களிடமிருந்து 750 முதல் 1000 அமெரிக்க டொலர் (ரூ .135,000 முதல் ரூ .180,000 வரை) வசூலிக்கும் இந்த கும்பல்கள், இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ள போலந்து தூதரக அதிகாரிகளுடன் விசா நேர்காணலை ஏற்பாடு செய்வதாக வாக்களித்து விட்டு பின்னர் ஏமாற்றி செல்வதாக தொழிலாளர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் போலந்து தூதரகம் இல்லை. புதுதில்லியில் உள்ள போலந்து தூதரகமே இலங்கயர்களின் விசா விவகாரங்களை கவனிக்கிறது.

எனவே கொழும்பில் விசா மையம் அமைக்குமாறு போலந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இது ஒரு மாஃபியா என்றும் இதை நாங்கள் நிறுத்த வேண்டும் என்பதனால்தான் இலங்கையில் விசா மையத்தை நிறுவுமாறு போலந்து அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், போலந்தில் நிறைய நல்ல வேலைகள் உள்ளன, இதுபோன்ற வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் போலந்தில் வேலை பெற, ஒருவருக்கு பணி அனுமதி இருக்க வேண்டும் என்று போலந்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலை தேடுபவர்களை எந்த நேரத்திலும் போலந்தில் பணி அனுமதி இல்லாமல் இலங்கை வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை அண்மையில் வடக்கு இளைஞர்கள் சிலரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி முகவர் ஒருவர் கொழும்புவரை அழைத்து சென்று அவர்களை நட்டாற்றில் விட்டு மாயமாகியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.