திருகோணமலை மாவட்டத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!
திருகோணமலை மாவட்டத்தில் சடுதியாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில். இதுவரையில் அங்கு 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இதுவரையான புதிய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
அதன்படி, திருகோணமலையில் 58 பேருக்கும், மூதூரில் 28 பேருக்கும், கிண்ணியாவில் 9 பேருக்கும், தம்பலகாமத்தில் 5 பேருக்கும், சேருவிலையில் 3 பேருக்கும், மற்றும் கோமரங்கடவெல பிரிவில் ஒருவருமாக தொற்றால் பாதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் , தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உரிய பிரதேச செயலகம் மூலம் அரசாங்கத்தின் உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டும் வருகின்றது.
சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால் மக்களை மிக அவதானமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மூலம் டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை