தமிழ் பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பகுதி!


அமெரிக்காவின் அடுத்த உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸ் தனது வெள்ளை மாளிகை சிரேஷ்ட பணிக்குழுவில் முக்கிய பதவிக்கு இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான ரோஹினி கொஸக்லுவை இன்று நியமித்துள்ளார்.

உப ஜனாதிபதியின் Domestic Policy Advisor உள்ளக கொள்கை ஆலோசகர் என்ற இந்த இந்த நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

தற்போது பைடன் -ஹரிஸ் ஆட்சிமாற்றக் குழுவில் கமலா ஹரிஸின் சிரேஸ்ட ஆலோசகராக பதவிவகிக்கும் ரோஹிணி முன்னதாக பைடன் -ஹரிஸ் பிரசாரக் குழுவில் சிரேஷ்ட ஆலோசகராக பதவிவகித்திருந்தார்.

இதற்கு முன்பாக இவ்வருட ஆரம்பத்தில் ஹாவார்ட் பல்கலைக்ககழகத்தில் முக்கிய கல்வித்துறைப் பதவியை வகித்திருந்தார் ரோஹிணி.

கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக கமலா ஹரிஸ் பதவி வகித்தபோது அவரது பணிக்குழு பிரதானியாக Chief of Staff பதவி வகித்த ரோஹிணி கொஸக்லு அதன் பின்னர் 2019ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக கமலா ஹரிஸ் போட்டியிட்டபோதும் அவரது பணிக்குழு பிரதானியாக திகழ்ந்தார்.

மூன்று இளம் பிள்ளைகளின் தாயாரான ரோஹிணி கொஸக்லு திருமணமாகுமுன்னர் ரோஹிணி லக்ஸ்மி ரவீந்திரன் என அழைக்கப்பட்டிருந்தார். அவரது பெற்றோர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.