ஜப்பானில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!
நாட்டில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஜப்பானில் உள்ள இலங்கை முஸ்லிம்களின் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேற்றையதினம் அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும் அனைவரையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி எரியூட்டப்படுகின்றன.
எனினும் இதற்கு முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக, இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் ஜனாசா எரிப்புக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை