மோட்டார் வாகன திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!


 மோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


நாரஹேன்பிட்டி மற்றும் வெஹரஹெர அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள், முன்பதிவு செய்து கொள்வதற்காகவே இப்புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, 0112 677877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முன்பதிவை செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.