பிரித்தானிய மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

 


பிரிட்டன் மருத்துவமனைகள் முதற்கட்டமாக டிசம்பர் 7 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மருந்துகளைப் பெறக்கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பயோடெக், பைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு பிரிட்டன் மருந்து, சுகாதாரப் பராமரிப்புப் பொருட்களின் தயாரிப்பு ஒழுங்குமுறை ஆணையம் சில நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது.

வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் உரிய பலனைத் தராவிட்டால், வரும் வாரங்களில் மூன்றாம் கட்ட நோய்ப்பரவல் நேரலாம் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடப்பில் உள்ள முடக்கம் வரும் புதன்கிழமை நள்ளிரவில் முடிவுக்கு வரும். பின்னர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூன்றாக வகைப்படுத்தப்படும். கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக டிசம்பர் 22 லிருந்து 27 ஆம் திகதி வரை, சமூக ஒன்றுகூடல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். மூன்று குடும்பங்கள் வரை ஒன்று கூட அனுமதிக்கப்படும்.

ஆனால் அதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை உயரக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.