யாழில் இன்று நால்வருக்கு தொற்று!


 யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (26) நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

முல்லேரியா ஆய்வுக்கூட பரிசோதனையில் 3 பேருக்கும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆய்வுக்கூட பரிசோதனையில் ஒருவருக்கும் என சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த நால்வருக்கும் தொற்று உறுதியானது.

Blogger இயக்குவது.