வவுனியாவில் இருவருக்கு தொற்று!


 உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத் தலைவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (11) கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாற்றாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் நேற்று முன்தினம் (09) பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன.

இதன்படி அவர்களில் ஒருவருக்கே இன்று கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா – சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருக்கும் அவருடைய 5 வயது மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து கடந்த வாரம் வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

சுயதனிமைப்படுத்தப்பட்டு 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் அவர்களிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.