எம்சிசி வேறு வடிவில் வந்தாலும் கைச்சாத்திடோம்!


 அமெரிக்கவுடனான எம்.சி.சி உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது. நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் செய்யும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

காசல்ரீ நீர்தேக்கப்பகுதிக்கு அண்மித்த லெதண்டி தோட்டத்தில் இன்று (18) மர கன்றுகள் நாட்டிய போது இதனை தெரிவித்தார். மேலும்,

“எம்.சி.சி உடன்படிக்கை இனி கைச்சாத்திடப்படாது. அதிலிருந்து அமெரிக்காவும் விலகிவிட்டது. எம்.சி.சி உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது எனக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த கொள்கை தொடர்ந்தும் பின்பற்றப்படும். அது வேறு வடிவில், வேறு பெயரில் வந்தால் கூட ஏற்பதற்கு தயாரில்லை.” – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.