செங்கலடி பிரதேச சபை அமர்வை புறக்கணித்து போராட்டம்!


 மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேசசபை அமர்வை புறக்கணித்து, உறுப்பினர்கள் சபை நடவடிக்கையில் கலந்துகொள்ளாது நேற்று (17) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

31 சபை உறுப்பினர்களைக் கொண்ட செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேலு தலைமையில் பிரதேச சபையின் 36வது மாதாந்த அமர்வானது கூடவிருந்த நிலையில், சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாது சபை முன் பிரதித்தவிசாளர் உள்ளிட்ட 23 உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சபை அமர்விற்கான அழைப்பிதழ் புதன்கிழமை காலைதான் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதாகவும், பிரதேச சபை சட்டத்தின்படி நான்கு நாட்களுக்கு முன் அறிவிக்கப்படவேண்டும் என்றும், இருப்பினும் பிரதேச சபையின் செயலாளர் எங்களை முட்டாள் என்கின்ற நிலைக்கு நடத்திக்கொண்டிருக்கின்றார் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.