உதயனுக்கு எதிராக வழக்கு!


 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தை பிரசுரித்தமை தொடர்பில் “உதயன்” பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த வழக்கு இம்மாத ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்படடது.

இந்நிலையில் இந்த வழக்கு மார்ச் 21 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரது படத்தையும், சொற்களையும் பிரசுரித்தமை பயங்கரவாத தடை சட்டத்திற்கு உட்பட்ட குற்றம் என்று தெரிவித்தே இந்த வழக்கு தாக்கலாகியுள்ளது.

Blogger இயக்குவது.