பேலியகொடை சந்தையை திறக்க நடவடிக்கை!


 சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி, பேலியகொடை மீன் சந்தையை மீளத் திறக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸவினால், உரிய அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பேலியகொடை மீன் சந்தை வளாகத்துக்குள், பறவைகள் அழுக்குகளை ஏற்படுத்தாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீன்சந்தையில் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பேலியகொடை நகர சபைக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பட்சத்தில், ஓய்வு பெற்ற பொது சுகாதார பரிசோதகர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.