மாணவர்களின் படிப்பை அழிக்கும் நடவடிக்கை !

 


தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.

11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 18,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வந்ததை இந்திய அரசு நிறுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்நடவடிக்கை அம்மாணவர்களின் படிப்பை அழிக்கும் நடவடிக்கையாகும்.

இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு இந்த உதவித் தொகையை தொடர்ந்து அளிக்கவேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துவதோடு, அவ்வாறு செய்ய மத்திய அரசு மறக்குமானால், தமிழக அரசு இம்மாணவர்களுக்கு அளித்துவரும் உதவியோடு, இந்தப் பணத்தையும் சேர்த்து அளிக்குமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.