மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலை பெண்ணுக்கு கொரோனா!

 


உடப்பு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உடப்பு பகுதிக்கு பொறுப்பான சுகாதாரத்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இப்பெண், உடப்பிலிருந்து சிலாபம் பகுதி ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கு தினந்தோறும் சென்று வருபவர் என்றும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக மருந்து உட்கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுகயீனம் காரணமாக உடப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதே இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

தொற்றுக்குள்ளானவரின் மகள் உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற நிலையில் பாடசாலையில் திங்கட்கிழமை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பாடசாலைக்கு விரைந்த பெற்றோர் பாதுகாப்பு கருதி தமது பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னர் பாடசாலையின் அதிபர் தலைமையில் வலயக்கல்விப் பணிப்பாளர், உடப்பு பொலிஸார், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட விஷேட கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அதே நேரம் தொற்றுக்குள்ளானவரின் அருகில் வசித்தவர்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.