மின்னல் தாக்கி வயோதிபரொருவர் ஒருவர் பலி!
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர், நையந்தன் வயல் பகுதியில் மின்னல் தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது வயலுக்கு வேலைக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சம்பூரைச் சேர்ந்த செல்லத்துறை ராமமூர்த்தி வயது (65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை