நைஜீரியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள்!


 இலங்கைக்கு நைஜீரியாவிலிருந்து 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் சிக்கியுள்ளனர்.

நைஜீரியாவிலிருந்து தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஒரு வகை காய்ந்த இலையே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தலைமுடிக்கு பூசும் நிறப்பூச்சி என குறிப்பிட்டு இந்த போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவிலிருந்து கண்டி – அக்குரணை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் விலாசத்திற்கே இந்த பொதி தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் தொகையை, ஆய்வுகளுக்காக தேசிய ஓளடதங்கள் அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடியே 40 லட்சம் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவிக்கின்றார்.

Blogger இயக்குவது.