திடீர் நோயின் மர்மம் விலகியது!


 ஆந்திராவின் எலுருவில் பரவிய மர்ம நோய், பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் இரசாயன பொருள் காரணமாக இருக்கலாமென கருதப்படுகிறது. நீர் மாசுபாடு மற்றும் பிற சோதனைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மருத்துவ குழுக்கள் இப்போது பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் இரசாயன பொருள் மீது கவனம் செலுத்துகின்றன.

ஆந்திராவின் எலுருவில் பரவிய மர்ம நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 450 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்ப பகுப்பாய்வு அறிக்கைகள், ஆர்கனோக்ளோரின் பொருட்களின் தாக்கத்தை கிட்டத்தட்ட நிறுவியுள்ளன. எனினும், இன்னும் ஆராய்ச்சிக் தொடர்கின்றன.

ஆர்கனோக்ளோரின் என்பது பூச்சிக்கொல்லிகள் விவசாயம் மற்றும் கொசு கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன்கள் ஆகும். சேர்மங்களில் டிக்ளோரோடிபெனைல்ட்ரிச்ளோரோஎத்தேன் (டி.டி.டி) அடங்கும். இது கொசு எதிர்ப்பிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

எலுரு நகரில் ஒன்-டவுன் பகுதியில் முதன்முதலில் தோன்றிய இந்த விஷம், இப்போது எலுரு மற்றும் டெண்டுலூருவின் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இருப்பினும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இதுவரை, 263 பேர் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைத்து நோயாளிகளும் கால்-கை வலிப்பு, மறதி, பதட்டம், வாந்தி, தலைவலி மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கால்-கை வலிப்பால் ஒரு முறை மட்டுமே அவர்களிற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்ட யாரும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.