மகளின் மரணத்துக்கு காரணம் மருமகனே!


 முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பாக அவரது தந்தை வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – செல்வபுரம் கோயிற்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணத்திற்கு காரணம் தற்போது வெளி மாவட்டத்தில் உள்ள மருமகன் சுஜிவிதன்தான் என உயிரிழந்த பெண்ணின் தந்தை பத்மநாதன் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் அறையினுள் யன்னலில் துணி கயிறு ஒன்று கட்டி அதில் தூக்கிட்டுள்ளதுடன், சடலம் தரையில் இருப்பதால் ஆரம்பகட்ட விசாரணையில் பொலிஸாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.