பாெலிஸார் நால்வருக்கு கொரோனா!


 மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி மேலும் மூவருக்கு தாெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மற்றும் பெருங்குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு மாத்திரம் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் சாதாரண குற்றச்செயல்கள் குறித்த முறைபாடுகளை கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.