பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா!


 மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுக்கள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த போதே இவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் நாளை பொலிஸ் நிலையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் அம்பாறை – அக்கரைப்பற்றில் 13 பேருக்கும், அட்டாளச்சேனை மற்றும் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.