வலி. வடக்கு பிரதேச சபை சேவைகள் வழமைபோல!


 வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என்று வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு நேற்றையதினம் (19) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த ஊழியர் மின்மோட்டார் இயக்கும் கடமையினை புரிபவரே தவிர பிரதேச சபை ஊழியர்களோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கவில்லை. குறித்த ஊழியர் வலி வடக்கு பிரதேச சபையின் தெல்லிப்பளை உப அலுவலகத்தில் கடமை புரிகின்றார்.

அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக பிரதேச சபையின் செயற்பாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்களை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தனிமைப்படுத்தும் செயற்பாட்டில் முன்னெடுத்துள்ளனர். எனவே பிரதேச சபை சேவைகள் வழமைபோல் இடம்பெறும்” எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.