கொரோனாவுக்கான மருந்து ஆய்வை விரைவுபடுத்த அறிவுறுத்து!

 


கொரோனாவுக்கான உள்ளூர் வைத்தியம் மற்றும் மருந்து தொடர்பான பரிசோதனைகளை விரைவுபடுத்துமாறு தேசிய ஆராய்ச்சி சபைக்கு பிதரமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா சிறப்பு, வைத்தியர் ஹர்ஷா சுபசிங்க மற்றும் இந்திக்க ஜாகொட ஆகியோரின் உள்ளூர் வைத்தியம் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளை விரைவுபடுத்துமாறும், கொரோனாவுக்கான உள்ளூர் வைத்தியத்திற்கு கொழும்பு பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய ஆராய்ச்சி சபை உலகளாவிய தொற்றுநோய்களுக்காக கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் குறித்து ஒரு ஆய்வை நடத்தியதுடன், சிறந்த மூன்று தடுப்பூசிகள் குறித்த அறிக்கையை சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.