சொக்லேற் கனவுகள் 3 - கோபிகை!!
அவன் பார்த்த நாள்முதல்
அத்தை மாமாவிற்குள் இருந்த
அன்பும் அந்நியோன்யமும்
இன்னும் அப்படியே இருந்தது.
புன்னகையோடு பார்த்தவனிடம்,
'என்னடா,ஆதி,
அப்படி பார்க்கிறாய்,?'
என்றவரிடம்,
'ஒன்றுமில்லை' என
தலையை ஆட்டினான்.
மருமகனின் அருகமர்ந்து,
தலையை அன்போடு வருடியவர்,
'திருமணமாகி, பல
வருடங்களின் பின்னும்,
'நீங்கள் இல்லாத ஒருநாளைக்கூட
என்னால் நினைத்துப்
பார்க்கவே முடியாதென'
மனைவி சொல்கிறாள்
என்றால்தான்
அந்தக் கணவன்,
தன் இல்லற வாழ்வில்
வெற்றிகண்டிருக்கிறான்.
உன் அத்தை அடிக்கடி
இப்படிச் சொல்வாள்'
என்றவர்,
'மனைவி என்பவள்
நம்மோடு கடைசிவரை வருபவள்,
கணவனின் சுகதுக்கங்களை
தனதாக்கி கொள்பவள்,'
'அவளுக்கு விட்டுக்கொடுப்பதோ,
அவளை மதித்து நடப்பதோ
ஒருபோதும் தவறில்லை'
என்றபடி மனைவியை
அன்பு ததும்ப பார்த்தார்.
இளைஞனான அவனுக்குள்
இனிமையான சாரல்கள்....
இமைகளுக்குள் பூ பூத்தது,
இன்பத் தளிர்களில்.....
தோசையோடு சட்னியை
தொட்டுக் கொண்டிருந்தாள்
அனுதி.
அத்தை தேன்மொழி,
அவளையும் கவனித்தபடி
அங்குமிங்குமாய் நடந்து
மாமாவின் தேவைகளையும்
செய்துகொண்டிருக்க,
'தேன்மொழி, ராத்திரி முழுதும்
தலைவலின்னு தைலம் போட்டியே,
காலையில ஏம்மா,
இப்பிடி நடக்கிறாய்,
நான் பார்த்துக்கொள்றன்,
விடேன்' என்றார் கரிசனையோடு....
'அத்தைக்கு தலைவலியா?'
'என்னாச்சு அத்தை,?'
ஏன் சொல்லவில்லை?'
அவசரமாய் எழுந்துகொண்டாள் அனுதி.
'அடடே....உங்களோட...'
'எனக்கு ஒண்டும் இல்லை,
பாதி சாப்பாட்டில
எழும்பகூடாது, நீ சாப்பிடு,'
என்றபடி,
'எனக்கு தலைவலி போனாச்சு,
ஆனா, காலையிலயே
ரீயோட வந்து
என்னை எழுப்பினது
நீங்கதானே, பிறகென்ன'
என்றபடி கணவனிடம்
பையை கொடுக்க,
கண்களால் விடைபெற்ற
மாமாவையும்
வெட்கத்தில் சிவந்த
அத்தையையும் பார்த்தபடி
அமர்ந்திருந்தாள் அனுதி....
இனிய கனவுகள் அவளுக்குள்.
கனவுகள் தொடரும்....
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை