அவுஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத்தீ!


 அவுஸ்திரேலியாவில் பிராஸர் தீவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அந்த தீவிலுள்ளவர்களை வெளியேறுவதற்கு நேற்று  ஞாயிற்றுக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த  ஆறு வாரங்களாக, தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ச்சியான வெப்ப அலை மற்றும் கடும் வரட்சியினால் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் நடுப்பகுதியில் சட்டவிரோதமாக தீ மூட்டப்பட்டமையினால் காடுகள்  தீப்பிடித்துள்ளது. தீவின் பாதிக்கும் மேலாக  சுமார் 83,000 ஹெக்டேர்  நிலப்புகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.

பிராஸர் தீவு குயின்ஸ்லாந்து கடற்கரையில் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகும். உலகின் மிகப்பெரிய மணல் தீவாகும், இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில் 200 க்கும் குறைவான நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளனர், அவர்களில் சிலர் சுற்றுலாப் பயணிகளுடன் வெளியேற்றப்பட்டனர்.

பிராஸர் தீவின் தீ ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு "கருப்புக் கோடை" முதல் காணப்பட்ட மிகக் கடுமையான தீப்பிழம்புகளில் ஒன்றாகும்.

அவுஸ்திரேலியா அண்மைக்காலமாக கடும் வரட்சியுடன் கூடிய நீண்ட கோடை காலங்களை எதிர்கொண்டு வருகிறது.

கருப்புக் கோடை என அழைக்கப்பட்ட பிந்திய கேராடை காலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்களில் சுமார் 12 மில்லியன் ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து கருகியதுடன் அவற்றில் சிக்கி 33 பேரும் ஒரு பில்லியன் விலங்கினங்களும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019-2020 களில் இதுவரை காட்டுத்தீ மிகப் பெரிய மற்றும் மிக தீவிரமான பதிவாகியுள்ளது. காலநிலை மாற்றத்தினால் அதிகரித்துவரும் விளைவுகளால் இது நடைபெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.