உடல் தகனத்தை எதிர்த்து வாழைச்சேனையில் போராட்டம்!
முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதை எதிர்த்து வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளைத் துணியை கட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது வாழைச்சேனைள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் நுழைவாயிலில் பிரதேசத்திலுள்ள அமைப்பின் பிரதிநிதிகள், சிறுவர்கள், மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு வெள்ளைத் துணியை கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
கருத்துகள் இல்லை